மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீராத ரன் வேட்டை! சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்து முதலிடம் பிடித்த விராட் கோலி
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் அதிக இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார் விராட் கோலி.
பூனேவில் நேற்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் துவக்க ஆட்டக்காரர் மயங் அகர்வால் சதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் சதமடித்தார்.
தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்திலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர். விராட் கோலி தனது 7 ஆவது இரட்டை சதத்தினை பூர்த்தி செய்தார். இந்தியாவில் இருந்து சர்வதேச அளவில் அதிக இரட்டை சதமடித்த வீரர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார் கோலி.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் தலா 6 முறை இரட்டை சதம் அடித்துள்ளனர். சர்வதேச அளவில் தற்போது விராட் கோலி 4 ஆவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் டான் பிராட்மேன்(12), சங்ககரா(11), லாரா(9) என முதல் மூன்று இடங்களில் உள்ளனர். 7 சதங்களுடன் 4 ஆவது இடத்தில் வாலி ஹமோந்த், ஜெயவர்த்தனே மற்றும் விராட் கோலி உள்ளனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கோலி ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.