மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல எனக்கு சொன்ன மெசேஜ் இதுதான்.... மனம் திறந்த விராட் கோலி...!
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வருபவர் விராட் கோலி. இவர் தனது பேட்டிங் திறமையால் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். கோலி விளையாட்டு மைதானத்திற்குள் களம் இறங்கினாளே ரசிகர்களின் ஆரவாரமும், அக்களிப்பும் பார்ப்பதற்கே மெய்சிலிர்த்து விடும்.
இருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாட்களை சந்தித்து வந்தார். சிறந்த பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்த இவருக்கு ரன் எடுப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது.
விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் T20 உலக கோப்பையில் மூன்று அரை சதங்களை அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் ஆர்சிபி பாட்காஸ்டில் பேசிய விராட் கோலி, ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நான் விலகிய போது எனக்கு ஆறுதல் அளித்த ஒரே நபர் எம் எஸ் தோனி மட்டுமே.
தோனி அனுப்பிய அனுப்பிய அந்த குறுஞ்செய்தியானது இந்த சரிவிலிருந்து எப்படி மீள்வது என்ற ஒரு யோசனையை தந்தது. என்னை விட மூத்தவரான ஒருவருடன் இவ்வளவு வலுவான உறவை நான் கொண்டிருக்க முடியும் என்பதை அவர் அனுப்பிய குறுஞ்செய்தி எனக்கு உணர்த்தியது. அவர் அன்று எனக்கு அளித்த ஊக்கமே நான் இன்று மீண்டும் இந்த கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சாதனையை படைக்க எனக்கு உதவி செய்துள்ளது.