ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நான் ரொனால்டோவாக மாறினால் முதலில் இதைத்தான் செய்வேன்.! விராட் கோலி ஓப்பன் டாக்.!
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த விராட் கோலி தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளுக்கான பெங்களூரு அணியின் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். தற்போது பேட்டிங்கில் கவனம் செலுத்திவரும் அவர் ஆர்சிபி அணிக்கான போட்டோஷுட் நிகழ்ச்சியின்போது தனக்குப் பிடித்த விளையாட்டு வீரர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.
அப்போது அவர் கூறுகையில், தனக்கு பிடித்த விளையாட்டு வீரர் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டா என தெரிவித்துள்ளார். மேலும், ஒருநாள் நீங்கள் காலையில் எழுந்தவுடன் ரொனால்டோவாக மாறினால் முதலில் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
இதற்க்கு பதிலளித்த விராட், அப்படி ஒரு நிலை வந்தால் முதலில் தான் எனது மூளையை சோதித்து பார்ப்பேன். ஏனென்றால், அவருக்கு இருக்கக்கூடிய அந்த மன வலிமை எங்கிருந்து வருகிறது என்பதை நான் ஆராய்ச்சி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.