மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகக்கோப்பை போட்டியில் இதெல்லாம் கிடையவே கிடையாது..! உலக அணிகளை பிரமிக்கவைத்த விராட் கோலி.!
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்று தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இந்தநிலையில் லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அந்தவகையில் உலகக்கோப்பையில், இந்திய அணி வெற்றிகரமாக தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் 2 -வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உலகக்கோப்பை குறித்து கூறுகையில், உலகக்கோப்பை போட்டியில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது. பெரிய அணி என்று குறிப்பிடும் அந்த அணியின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கும் போது நெருக்கடிக்கு ஆளாகி தோல்வியை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட்டி போட்டியில், இன்று இந்திய அணி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.