ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கிரிக்கெட் வீரர் சேவாக்கின் அழகான மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் பாத்துருக்கீங்களா? இதோ!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதி போட்டி நாளை கோலாகலமாக நடைபெறவுள்ளது.
தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிவந்த இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு சாதனைகளை செய்த கிரிக்கெட் வீரர் சேவாக் பற்றித்தான் இங்கு பார்க்க உள்ளோம்.
வீரேந்திர சேவாக் 1978 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாள் டெல்லியில் பிறந்தார். இந்திய அணிக்கான தனது முதல் ஒருநாள் போட்டியை 1999 ஆம் ஆண்டு விளையாடினர் சேவாக். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி அணிக்கு ரன் சேர்ப்பதால் இவரை மிஞ்ச இன்றுவரை யாரும் இல்லை.
பல்வேறு சதம், சாதனை என இன்றுவரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் சேவாக். மேலும், தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவர் ஆசைப்படி சேவாக் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பள்ளியையும் நடத்திவருகிறார் சேவாக்.
இவரது திருமணம் வாழ்க்கையை பார்த்தோமேயானால், ஆர்த்தி அகல்வாட் என்பவரை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் சேவாக். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதுவரை பெரிதாக வெளிவரதா இவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.