#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மின்னல் வேகத்தில் ஸ்டெம்ப்பிட் செய்து கெத்து காட்டிய தல தோணி! வைரல் வீடியோ!
இன்று நடைபெற்று வரும் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஷஹீதியை இந்திய அணி விக்கெட் கீப்பர் தோணி மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆசிய கண்டத்தின் கிரிக்கெட் அணிக்கான சாம்பியனை முடிவு செய்யும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 14வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் சூப்பர் 4 லீக்கின் இன்றைய போட்டியில் தோணி தலைமையிலான இந்திய அணி, ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி என்வென்றால் தல தோணிதான் இந்த ஆட்டத்திற்கான கேப்டனாக செயல்படுகிறார். கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்கெட் கீப்பிங்கில் தான் கில்லி என்பதை தோனி மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். மின்னல் வேகத்தில் அவர் செய்த ஸ்டெம்பிங் வீடியோ இதோ.
MS Dhoni's quick stumping pic.twitter.com/srJmxX5Mzz
— Khurram Siddiquee (@iamkhurrum12) September 25, 2018