"இந்தியாவை வீழ்த்துவதற்கான சூட்சமம் எங்களுக்கு தெரியும்" பங்களாதேஷ் பயிற்சியாளர் சூசகம்



We know how to handle India with new ball

முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற இன்னும் ஒரு புள்ளி மட்டுமே தேவை. இதற்கு பங்களாதேஷ் அல்லது இலங்கையுடனான ஒரு போட்டியில் வென்றாலே போதும். ஆனால் பங்களாதேஷ் அணி இந்தியா மற்றும் பாகிஸ்தானை வென்றால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

wc2019

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நாளை பங்களாதேஷ் அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணியை பொருத்தவரை கடைசி ஆட்டம் வரை இழுபறியாய் போய்விடாமல் இருக்க நாளைய போட்டியில் நிச்சயம் வெலவதற்கே போராடும்.

wc2019

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை ஆரம்ப்த்திலேயே புதிய பந்தினை கொண்டு எப்படி சரிக்க முடியும் என பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் வால்ஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், "மைதானத்திற்கு ஏற்றவாறு புதிய பந்தினை பயன்படுத்தி இந்தியாவின் விக்கெட்டுகளை ஆரம்பத்தில் வீழ்த்த கூடிய பந்துவீச்சாளர்கள் எங்களிடம் உள்ளனர்.

wc2019

பிட்ச்சில் பந்து அதிகமாக டர்ன் ஆனால் துவக்கத்திலேயே சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு இந்திய பேட்ஸ்மேன்களை திணற செய்வோம். ஒருவேளை பந்து அதிகமாக ஸ்விங் ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு தாக்குவோம். எப்படியும் புதிய பந்தினை கொண்டு ஆரம்பத்திலேயே இந்திய பேட்ஸ்மேன்களை சரிக்கும் யுக்தி எங்களிடம் உள்ளது" என்று கூறியுள்ளார்.