தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கம்பீரமாக நடைபோடும் தல தோனியின் வீடியோவை பகிர்ந்து, புகழ்ந்து தள்ளிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!
ராணுவத்தின் மீதும் நாட்டின் மீதும் அதிக பற்று கொண்டவராக இருக்கும் கேப்டன் தோனி இரு மாதம், துணை ராணுவப்படையில் இணைந்து சேவை செய்ய உள்ளார். இதை இந்திய கிரிக்கெட் போர்டிடம் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது. அன்று முதல் இந்திய அணியின் மிக முக்கிய விரரும், மூத்த வீரருமான தல தோனியின் ஓய்வு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்தநிலையில் தோனி துணை ராணுவப்படையில் இணைந்து சேவையாற்ற இந்திய கிரிக்கெட் வாரியமும் அவருக்கு அனுமதி கொடுத்துள்ளது. இந்திய அணி செல்லும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட டோனி, காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அனுமதி பெற்றார்.
I shared this video with friends and family because they know how I feel about honour but the moment between wife and husband truly shows an inspirational kind of love for country and partner. Please enjoy as I did. pic.twitter.com/Pre28KWAFD
— Sheldon Cotterell (@SaluteCotterell) 28 July 2019
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், தல தோனி ராணுவத்தில் பயிற்சி பெறுவதை புகழ்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘தோனி களத்தில் நின்றால் அணிக்கு பெரும் பலம் மேலும், இவர் சிறந்த தேச பக்தர். கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.
மேலும், கடந்த 2011ஆம் ஆண்டு தோனி கௌரவ லெப்டினண்டாக பொறுப்பேற்ற வீடியோவையும் பதிவு செய்து அதில் ‘என்னை போலவே நீங்களும் மகிழுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.