#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணியில் தோனியின் இடம் குறித்து முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே அதிரடி கருத்து
இந்திய அணியின் முன்னணி சழற்பந்துவீச்சாளர், கேப்டன், பயிற்சியாளர் என பதவிகளை வகித்தவர் அனில் கும்ப்ளே. இவர் தற்பொழுது தோனி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் சரியாக விளையாட தவறிய தோனி 2019 உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் தனது திறமையை நிரூபித்து வருகிறார் தோனி. இதனால் அவர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது உறுதி. ஆனால் அவர் எந்த இடத்தில் களமிறங்கினால் சரியாக இருக்கும் என்பதில் தான் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
தற்போதைய என்னைப் பொறுத்தவரை 4 முதல் ஆறாவது இடத்தில் களமிறங்குவதற்கு இருக்கும் அனுபவம் வாய்ந்த ஒரே வீரர் தோனி மட்டுமே. மற்ற வீரர்கள் முக்கியமான போட்டிகளில் தங்களது கடமையை நிறைவேற்ற தவறிவிடுகின்றனர். இதனால் இந்திய அணியின் கேப்டன் கோலியை பொருத்தவரை தோனியை ஐந்தாவது இடத்தில் இறக்குவதையே விரும்புகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே "இந்திய அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை இழக்கும் பட்சத்தில் தோனியை 4 ஆவது இடத்தில் இறக்குவதே சரியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
மேலும் தோனி குறித்து பேசியுள்ள அவர் "இந்திய அணியின் துவக்க வீரர்கள் தடுமாறும் பட்சத்தில் நான்காவது வீரராக களமிறங்கி பலமுறை சிறப்பாக ஆடி உள்ளார் தோனி. எனவே அவருக்கு அந்த இடம் பொருத்தமாக இருக்கும். மேலும் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரியும் நேரத்தில் தோனி நிலைத்து நின்று ஆடும் வல்லமை கொண்டவர். அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் அவருடைய அனுபவத்தை பின்பற்றினாலே அணியை நல்ல நிலைமைக்கு அவரால் கொண்டு செல்ல முடியும். இதனை பலமுறை அவர் செய்துள்ளார்" என்றும் கூறியுள்ளார் கும்ப்ளே.