இந்திய அணியில் அடிக்கடி வீரர்களை மாற்றுவது ஏன்..? ரோகித் சர்மா விளக்கம்..!



Why Indian players are rotated often Rohit explains

இந்திய அணியில் சமீபகாலமாக பல புதுமுக வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு எதிரணிக்கு ஏற்றவாறு இந்திய அணி வீரர்களின் தேர்வு மாறுபடுகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என தனித்தனியே மூன்று இந்திய அணியை உருவாக்கும் அளவிற்கு தற்போது சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்கள் பிசிசிஐ வசம் உள்ளனர். 

Rohit sharma

வீரர்களை இப்படி சுழற்சி முறையில் தேர்வு செய்து வாய்ப்பு அளிப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில், 'திறமைவாய்ந்த பலதரப்பட்ட வீரர்களுக்கு சர்வதேச அளவில் வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் பெஞ்ச் எப்போதுமே வலிமையாக தோன்றும்.

இப்போது அதிகமான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் காயம் ஏற்படுவதும் வீரர்களின் பணிச்சுமையை சமாளிப்பதும் பெரும் கடமையாக உள்ளது. எந்நேரமும் குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட கூடாது. எனவேதான் இத்தகைய சுழற்சி முறையை கையாள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

Rohit sharma

நாளுக்கு நாள் இந்திய அணி வலிமையான அணியாக உருவாக வேண்டும் என்பதே எனது நோக்கம். எதிர்காலத்தில் இந்திய அணியை பாதுகாப்பான கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்' என கூறியுள்ளார். ரோகித் சர்மா சொல்வதும் ஒருபக்கம் நியாயமாகத் தான் தோன்றுகிறது. 

Rohit sharma

ஏனெனில் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும் கோலி, பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தால் மட்டுமே இந்திய அணியால் வெல்ல முடியும் என்ற எண்ணமும் ரசிகர்கள் மனதில் இருந்து மறைந்து விடும்.