மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொல்லார்ட் விளாசல்! இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு
கயானாவில் நடைபெற்று வரும் 3ஆவது T20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தீபக் மற்றும் ராகுல் சாகர் இடம்பெற்றுள்ளனர்.
ஆட்டத்தின் துவக்கத்திலேயே சிறப்பாக பந்து வீசிய தீபக் சாகர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் 3 பேட்ஸ்மேன்களான நரைன், லீவிஸ், ஹெட்மயர் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார்.
அதன் பின்னர் களமிறங்கிய பொல்லார்ட் 58, பூரன் 17, பவல் 32, ப்ராத்வெயிட் 10, ஆலன் 8 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் தீபக் சாகர் 3, சைனி 2, ராகுல் சாகர் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணி வெற்றி பெற 147 ரன்கள் தேவை.