திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அசிங்கப்பட்ட இந்திய அணி! மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுமா!
மெல்போர்னில் நடந்து வரும் 3 வது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாளான இன்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. எனவே இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
மூன்றாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களுக்கு எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 106 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. ஆஸி. அணி முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் பும்ரா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்சில் 292 ரன்கள் பின்தங்கி பாலோ ஆனை தவிர்க்க முடியாத ஆஸி. அணியை மீண்டும் பேட்டிங் செய்ய இந்திய அணி அழைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக இந்திய அணியே தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. ஆனால் இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அதிகமான ரன்கள் எடுத்து இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயிக்கலாம் என்ற எண்ணம் தவிடுபொடியானது.
பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய புஜாரா மற்றும் கோலி இருவருமே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட் 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ஆஸி. அணி வெற்றி பெற இன்னும் 336 ரன்கள் தேவைப்படுகிறது.