#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரே ஆட்டத்தில் 3 சாதனைகள் படைக்க வாய்ப்பு; நாளைய முதல் போட்டியிலே சாதிப்பாரா கோலி!
ஐபிஎல் தொடரின் 12வது சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்கவுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் முன்னாள் சாமம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
முதல் போட்டியிலேயே தோனி மற்றும் கோலி தலைமையிலான அணிகள் மோதுவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. போட்டி சென்னையில் நடைபெறுவதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதற்கான 3 வாய்ப்புகள் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலியின் வசம் உள்ளன.
2008 ஆம் ஆண்டின் ஐபிஎல் துவக்கத்திலிருந்தே பெங்களூரு அணிக்காக ஆடி வருகிறார் விராட் கோலி. இதுவரை 163 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 4948 ரன்கள் எடுத்து ரன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 176 போட்டிகளில் 4985 ரன்களுடன் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். நாளைய போட்டியில் கோலி, ரெய்னாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்க வாய்ப்பகள் உள்ளன.
மேலும் 5000 ரன்கள் எடுக்க இன்னும் 52 ரன்களே தேவை. எனவே முதலில் 5000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கோலி தட்டிச்செல்ல வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே முதலில் 4000 ரன்களை கடந்தவரும் கோலி தான்.
மேற்கூறியவாறு நாளைய போட்டியில் கோலி அரைசதம் அடித்தால் அதிக அரைசதம் எடுத்தவர்கள் பட்டியலில் வார்னருடன் முதலிடத்தில் கோலி இடம்பெறுவார். வார்னர் 39, கோலி 38 அரைசதங்களை இதுவரை விளாசியுள்ளனர்.
மேலும் ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர் கோலி தான். 2016ஆம் ஆண்டு சீசனில் கோலி அடித்த 973 ரன்களை இந்த சீசனில் யாராவது முறியடிப்பார்களா என பார்ப்போம்.