மீண்டும் அரையிறுதியா! இந்தியாவை செய்ததுபோல் இங்கிலாந்தையும் செய்யுமா நியூசிலாந்து?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி ஆனது இன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் நிக்கோல்ஸ் மட்டும் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார்.
50 ஓவர்கள் போட்டியில் 242 ரன்கள் என்பது பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் நியூசிலாந்தை பொறுத்தவரை இந்த இலக்குக்குள் எதிரணியை வீழ்த்தும் வல்லமை கொண்டது. இதற்கு சிறந்த உதாரணம் இதே உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தியதுதான்.
இந்தியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இதே போன்று முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் தனது சிறப்பான பந்துவீச்சால் இந்தியாவை 221 ரன்களுக்குள் சுருட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தற்போது இந்த இறுதிப் போட்டியிலும் இந்தியாவை சுருட்டியது போல் இங்கிலாந்தையும் சுருட்டி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கனவில் நியூசிலாந்து ரசிகர்கள் இருந்து வருகின்றனர் .நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.