மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு விஷயத்தை மட்டும் நினைத்து அவமானமாக உள்ளது - நியூசிலாந்து கேப்டன் உருக்கமான பேச்சு!
நேற்று லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது. 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. பின்னர் சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி அதிர்ஷ்டவசமாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
சிறிதும் விட்டுக்கொடுக்காமல் கடைசி வரை போராடிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆட்ட முடிவில் பேசிய போது, "பிட்ச்சின் தன்மையை வைத்தே முதல் பேட்டிங்கை தேர்வு செய்தோம். ஆனால் 10-20 ரன்கள் குறைவாகவே எடுத்துவிட்டோம். ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் எதிரணியினரை சிறப்பாக கட்டுப்படுத்தினர்.
இரு அணியினரும் விட்டுக்கொடுக்காமல் கடைசி வரை போராடியது மிகவும் அருமையாக இருந்தது. உண்மையில் இது ஒரு அருமையான கிரிக்கெட். ஆனால் பென் ஸ்டோக்சின் பேட்டில் பந்து பட்டு இக்கட்டான சூழ்நிலையில் ஓவர் த்ரோவ் மூலம் பவுண்டரி சென்றது மிகவும் அவமானமாக உள்ளது. அதுதான் முடிவை மாற்றிவிட்டது. இதைப் போன்ற சம்பவம் இனி எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நடக்காது என நம்புகிறேன்" என வேதனையுடன் வில்லியம்சன் பேசினார்