இந்திய அணியின் தீவிர ரசிகையான 87 வயது பாட்டிக்கு விராட் கோலி கொடுத்த இன்ப அதிர்ச்சி.!



world cup 2019 - 87years old lady - ticket - viraht kohli

2019 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில லீக் போட்டிகளே மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போதைய  புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்து அரையிறுதிக்குள் முன்னேறிவிட்டன. அரையிறுதிக்கு தகுதி பெறும் 4வது அணி பாகிஸ்தானா அல்லது நியூசிலாந்தா என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த 40 ஆவது லீக் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் கம்பீரமாக நுழைந்தது. இப்போட்டியை நேரில் காண வந்த 87 வயதான பாட்டி சாருலதா ஒரே நாளில் உலகமுழுதும் பிரபலமானார். இந்திய அணியை அந்த வயதிலும் உறசாகப்படுத்திய அந்த பாட்டியை கேப்டன் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் போட்டிக்கு பின் சந்தித்தனர்.

World cup 2019

அப்போது சாருலதாவிடம் ஆசி பெற்ற கோலி, இந்திய அணி பங்கேற்கும் மற்ற போட்டிகளுக்கும் வந்து உற்சாகப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு அந்த பாட்டி தன்னிடம் டிக்கெட் இல்லை என தெரிவிக்க, கோலி நான் டிக்கெட் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதைப் போலவே இந்திய அணி பங்கேற்கும் மற்ற போட்டிகளை நேரில் காண சாருலதா பாட்டிக்கு டிக்கெட் கிடைத்துள்ளது. இதனை விராட் கோலி ஏற்பாடு செய்து எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் என்று சாருலதா பாட்டியின் பேத்தி அஞ்சலி தெரிவித்துள்ளார்.