35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
அடேங்கப்பா! சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்துக்கு பரிசுத் தொகை எத்தனை கோடி தெரியுமா?
1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள். இதுவரை 11 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்திருந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 5 முறையும், வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணிகள் தலா இரண்டு முறையும் பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.
மற்ற முன்னணி அணிகளாக விளங்கும் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை உலக கோப்பையை வெல்லவில்லை. கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படுவது இங்கிலாந்து. அந்த அணியும் உலக கோப்பையை வெல்லாதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. அந்த குறையை 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 12 ஆவது உலக கோப்பை தொடரில் வென்று சாதித்து காட்டியுள்ளது.
கடந்த இரண்டு உலக கோப்பை தொடர்களிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறி சென்ற நியூசிலாந்து அணிக்கு உலக கோப்பை எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் நூலிலையில் தனது வெற்றியை பறிகொடுத்த நியூசிலாந்து அணியின் சோகம் தொடர்கிறது.
நேற்றைய உலக கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது.
நேற்றைய ஆட்டம் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. பின்னர் சூப்பர் ஓவரும் 15-15 ரன்களால் டையில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து அதிக நான்குகள் (24/16) அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி அதிர்ஷ்டவசமாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த தொடருக்காக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மொத்தமாக ரூ.70 கோடியை பரிசு தொகையாக அறிவித்திருந்தது. இதில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு 28 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இரண்டாமிடம் பெற்ற நியூசிலாந்து அணிக்கு 14 கோடி வழங்கப்பட்டது. கடந்த முறை (2015) சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.26 கோடியும், 2வது இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த இரண்டு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.