#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மைதானத்திற்குள் அரைகுறை ஆடையுடன் ஓடிய பெண், இறுதி போட்டியில் நடந்த பரபரப்பு!அதிரவைக்கும் பின்னணி காரணம்.!
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்துக்குள் பெண் ஒருவர் அரைகுறையாக ஓட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பரபரப்பான சூழ்நிலையில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 1975 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடர்களில் முதல் முறையாக இங்கிலாந்து அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது. 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. அதன்பிறகு அதிக பௌண்டரிகள் அடித்த அணி என்ற முறையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில் போட்டி துவங்கும் முன், யூடியூப் பிரபலமான விடாலி என்பவரின் இணையதளத்தின் பெயரான ‘விடாலி அன் சென்சார்டு’ என வாசகம் இடம் பெற்றிருந்த பணியனை மட்டும் அணிந்திருந்த பெண் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்து ஓட முயன்றார்.
விடாலி அன் சென்சார்டு என்பது ஆபாச இணையதளமாகும் அதற்கு, விளம்பரம் தேடும் நோக்கத்தில் ஓட முயன்ற அந்த பெண்ணை மைதான காவலர்கள் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர். அந்த பெண் ஆபாச இணையதளத்தை நடத்தும் விடாலியின் தாய் என, விடாலியே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.