ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தீவிர உடற்பயிற்சியில் ஷிகர் தவான், வைரல் வீடியோ; மாற்று வீரருக்கு வாய்ப்பு குறைவுதான்.!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது வரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி ஆத்ரேலியா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் சிறப்பாக விளையாடி 117 ரன் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இந்நிலையில் ஆத்ரேலியாவுடனான போட்டியில் தவானுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த மூன்று வாரத்திற்கு ஆருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் ஏற்கனவே ‘பேக் அப்’ வீரர்களாக ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தவானுக்கு பதில் மாற்று வீரராக ரிஷப் பண்ட் இங்கிலாந்து கிளம்பி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
You can make these situations your nightmare or use it an opportunity to bounce back. 🙌
— Shikhar Dhawan (@SDhawan25) June 14, 2019
Thank you for all the recovery messages from everyone. 🙏 pic.twitter.com/mo86BMQdDA
இந்நிலையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் தவான் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருவதால் அவர் விரைவில் குணமடைய அதிக வாய்ப்புள்ளது. ஆகவே மாற்று வீரரை தேர்வு செய்யும் வாய்ப்பு குறைவுதான். தவான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.