பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
பும்ராவை சமாளிப்பது எப்படி? இரவெல்லாம் தூக்கமே இல்லை; நியூசிலாந்து வீரர் பரபரப்பு பேச்சு.!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நடந்து முடிந்துள்ளது. நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது மழையின் காரணமாக போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் மறு நாள் நடந்த நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
எளிமையான இலக்கை வென்றுவிடலாம் என்ற கனவோடு பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. மேலும் அடுத்தடுத்ததாக முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த நிலையில் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையை இழந்து மிகுந்த வருத்ததில் இருந்தனர்.
இந்த நிலையில் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி மீண்டும் நம்பிக்கையை கொடுத்தனர்.ஆனால் அவர்களும் விக்கெட்டை இழந்து வெளியேறியதை தொடர்ந்து இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து ராஸ் டெய்லர் கூறுகையில், ‘ரிசர்வ் நாளில் அதிகாலை 3 மணிக்கே எனக்கு முழிப்பு வந்துவிட்டது. எஞ்சியுள்ள ஓவர்களில் எப்படி ‘பேட்டிங்’ செய்ய போகிறேன் என தெரியவில்லை. இறுதிகட்ட ஓவர்களில் உலகின் தலைசிறந்த பவுலர்களான பும்ரா, சுவிங் கில்லாடி புவனேஷ்வர் குமாரை எதிர்கொள்வது எப்படி என தெரியாமல் யோசித்துக்கொண்டே இருந்தேன்.
அது ஒரு டெஸ்ட் போட்டியின் அனுபவமாக இருந்தது. முதல் நாளில் அவுட்டாகாமல் அடுத்த நாள் களமிறங்குவது போல இருந்தது. ஆனால் முதல் நாளிலேயே இந்திய அணிக்கு சவாலான இலக்கான 240 ரன்களை எட்ட வேண்டும் என திட்டமிட்டோம்.
கடைசி வரை களத்தில் இருந்து எப்படியாவது அந்த ஸ்கோரை எட்டும்படி கேப்டன் கேன் வில்லியம்சன் கேட்டுக்கொண்டார். ஒரு வழியாக நீசம் கேட்ச், மற்றும் மார்டின் கப்டிலின் மாயாஜால ரன் அவுட் நியூசிலாந்துக்கு வெற்றி தேடித்தந்தது.’ என்றார்.