#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
32 ஆண்டுகளுக்கு பிறகு பாபர் அசாம் படைத்த வரலாற்று சாதனை; நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி.!
இங்கிலாந்தில் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்ஹாமில் நடந்த 33வது லீக் போட்டியில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் வில்லியம்சன் மற்றும் நீசம் ஜோடி நிதானமாக ஆடினர். ஆனால் 27 ஆவது ஓவரில் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 83 மட்டுமே.
பின்னர் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நீசம் மற்றும் கிராண்ட்ஹோம் இருவரும் அரைசதம் அடித்தனர். 47வது ஓவரில் கிராண்ட்கோம் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. நீசம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார்.
பின்னர் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் மற்றும் ஹாரிஸ் சோகைல் சிறப்பாக ஆடி பாக்கிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். 49வது ஓவரில் ஹாரிஸ் 68 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். 50 ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாபர் அசாம் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தர்.
இப்போட்டியில் சதம் அடித்து அசத்திய பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், உலகக்கோப்பை அரங்கில், சுமார் 32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை பெற்றார்.
உலகக்கோப்பை அரங்கில் சதம் விளாசிய மிடில் ஆர்டர் வீரர்கள் பட்டியல்:
102* இம்ரான் கான் (எதிர்- இலங்கை, 1983)
103* ஜாகிர் அப்பாஸ் (எதிர்- நியூசி., 1983)
103 ஜாவித் மியான்தத் (எதிர்- இலங்கை, 1987)
100 சலீம் மாலிக் (எதிர்- இலங்கை, 1987)
101* பாபர் அசாம் (எதிர்- நியூசி., 2019)