மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜாம்பவான் சச்சின் சாதனையை தகர்த்தெறிந்த ஆப்கானிஸ்தான் வீரர்; என சாதனை தெரியுமா?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏறக்குறைய முதல் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். நான்காவது இடத்தை பிடிப்பது நியூசிலாந்து அணியா பாகிஸ்தான் அணியா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்டிண்டிஸ் அணிகள் மோதும் ஆட்டமானது நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்டிண்டிஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. ஹோப் அதிகபட்சமாக 77 ரன்கள் அடித்தார்.
இமாலய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு விக்கெட் கீப்பர் இக்ராம் 86 ரன்கள் அடித்து கைகொடுத்தார். இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் 18 அல்லது அதற்கு குறைந்த வயதில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சினை (84 ரன்கள்) பின்னுக்கு தள்ளினார் இக்ராம்.
உலகக்கோப்பை அரங்கில் அதிகரன்கள் எடுத்த டீனேஜ் வீரர்கள்:
18 வயது 278 நாட்கள் இக்ராம் 86, எதிர்- வெஸ்ட் இண்டீஸ், 2019
18 வயது 323 நாட்கள் சச்சின் 84, எதிர்- நியூசி, 1992
18 வயது 318 நாட்கள் சச்சின் 81, எதிர்- ஜிம்பாப்வே, 1992
இப்போட்டியில் அரைசதம் அடித்த இக்ராம் (18 வயது 278 நாட்கள் ), சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், இளம் வயதில் அரைசதம் விளாசிய விக்கெட் கீப்பரானார்.
முன்னதாக கடந்த 2007ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீரர் முஸ்பிகுர் ரஹீம் (19 வயது, 246 நாட்கள்) இந்த சாதனையை படைத்திருந்தார். இதை இக்ராம் நேற்று உடைத்தார்.
Afghanistan might have ended their #CWC19 campaign without a win, but young Ikram Ali Khil gave their fans something to smile about in @ACBofficials' final fixture 🙌
— Cricket World Cup (@cricketworldcup) July 4, 2019
How impressed were you with his knock? #AFGvWI | #AfghanAtalan pic.twitter.com/0qY15119cd
அதே போல உலகக்கோப்பை அரங்கில் 50 ரன்களுக்கு மேல் அடித்த இளம் வீரர்கள் பட்டியலில் இக்ராம் (18 வயது 278 நாட்கள்) மூன்றாவது இடம் பிடித்தார்.
இப்பட்டியலில் வங்கதேசத்தின் தமீம் இக்பால் (17 வயது 362 நாட்கள், எதிர்-இந்தியா, 2007), முகமது அஸ்ரபுல் (18 வயது 234 நாட்கள், எதிர்- நியூசி.,, 2003) ஆகியோர் உள்ளனர்.
* இந்திய ஜாம்பவான் சச்சின் (18 வயது 315 நாட்கள்) நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.