3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
உலககோப்பையின் கடைசி ஓவரில் இங்கிலாந்து வீரர் நடுவரிடம் இப்படி கூறினாரா? வெளியான தகவல்கள்!
கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 14 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து - இங்கிலாந்து இடையே நடந்த இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்றது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ஓவர்கள் முடிவில் 241 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமன் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி 6 பந்தில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் ஓடும்போது நியூசிலாந்து அணி வீரர் வீசிய பந்து இங்கிலாந்து அணி வீரர் ஸ்டோக்சின் பேட்டில் பட்டு ஓவர் த்ரோ முறையில் நான்கிற்கு சென்றது. இதுவே இங்கிலாந்து அணி வெற்றிபெற மிக முக்கிய காரணம்.
இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பென் ஸ்டோக்ஸை சந்தித்த மைக்கேல் வாகனுடன் பேசும் போது, பென் ஸ்டோக்ஸ் உண்மையில் நடுவர்களிடம் சென்று அந்த நான்கு ஓட்டங்கள் எங்களுக்கு தேவையில்லை. அதை நீங்கள் நீக்க முடியுமா? என கோரியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், ஐசிசி-யின் விதியில் உள்ளதால், அதை மாற்ற முடியாது என நடுவர்கள் கூறியதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.