96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உலகக் கோப்பை யாருக்கு! அனல் பறக்கும் இறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து மோதல்
கடந்த மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் கோலாகலமாக துவங்கப்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் என்ற யுத்தத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
1992 ஆம் ஆண்டிற்குப் பிறகு இங்கிலாந்து அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆடுகிறது. அதுவும் தனது சொந்த மண்ணிலேயே ஆட இருப்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் லீக் தொடரில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எளிதில் வென்றதால் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிகமாகவே உள்ளது.
உலகக்கோப்பை சாம்பியனை தீர்மானிக்கும் இந்த இறுதிப் போட்டி ஆனது இந்திய நேரப்படி 3 மணி அளவில் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.