WC2019 : இந்திய அணி அற்புதக்கலவை எந்த அணியையும் ஆட்டம் காண வைக்கும்; சவால் விடும் இந்திய வீரர்.!



world cup2019 - indian team good selection - ashwin

உலக கோப்பை போட்டித் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தின் வேல்ஸ் உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் விளையாடி வருகிறது.

மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கிய இத்தொடரானது ஜூலை மாதம் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 22 ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்ற இந்திய அணி, ஜூன் 5ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

World cup 2019

இதுவரை 5 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. தென்ஆப்பிரிக்கா அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. 

இதனால் நாளை மறுநாள் இந்தியாவுக்கு எதிராக ஆடும் போட்டியில் வெற்றி பெறும் நினைப்பில் அந்த அணி விளையாடும் என்பதால் முதல் போட்டியே இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகள் தான் ஆடும்  என்பதில் உறுதியாக உள்ளார்.

World cup 2019

அவரது கணிப்பின் படி, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என கணித்துள்ளார். இங்கிலாந்து சிறப்பாக செயல்படுவதோடு, உள்ளூரில் விளையாடுவது மிகப்பெரிய பலம். இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்க காரணம் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தான். ரோகித் சர்மா, சிகர் தவான், விராட் கோலி போன்ற மிகச் சிறந்த வீரர்களின் வரிசை உள்ளது. 

World cup 2019

அதோடு வளர்ந்து வரும் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக அதிரடி காட்டுவதோடு, அனுபவ தோனி சிறப்பாக அணியை வழிநடத்துகிறார். அதோடு சுழலில் அசத்தும் சஹால் -குல்தீப் ஒரு புறம் என்றால் கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா மிரட்டுவது அற்புதம். 

இந்த அற்புத கலவை எந்த அனியையும் ஆட்டம் காண வைக்க முடியும் என்பதால் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேற அதிக வாய்ப்புள்ளது என கூறுகின்றேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.