இரண்டு முறை டை ஆன உலகக்கோப்பை இறுதிப்போட்டி! இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது எப்படி?



worldcup champion decided after 2 tie in final

இன்று இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பரபரப்பான சூழ்நிலையில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது. 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது.

wc2019

சூப்பர் மூவரின் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் ஒரே ஒரு விக்கெட்டை இழந்து 15 ரன்கள் எடுத்தது. இதனால் சூப்பர் ஓவரும் மீண்டும் டையில் முடிந்தது.

wc2019

இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற முறையில் இங்கிலாந்து அணி இந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இங்கிலாந்து அணி இந்த போட்டியில் 24 பவுண்டரிகளையும் நியூசிலாந்து அணி 16 பவுண்டரிகள் மட்டுமே விளாசியதால் இங்கிலாந்து இந்த போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதல் முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.