மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடஅட. யோகிபாபுக்கு அடிச்ச செம ஜாக்பாட்! இனி வேற லெவல்தான்! வெளிவந்த அசத்தலான அப்டேட்!!
தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான ராஜாராணி படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே ரசிகர்களின் பாராட்டை பெற்ற அவர் அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கான் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறாராம். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் பிரபல தமிழ் நடிகரும் இணைந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதாவது யோகி பாபு அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இதுகுறித்து ரசிகர்கள் கேட்டதற்கு யோகிபாபுவும் சமூக வலைத்தளத்தில் அதனை உறுதிசெய்து பதிலளித்துள்ளார்.