சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
IPL தொடரில் சிறந்த கேப்டன் அவர் தான் - ஷாக் கொடுத்த யூசுப் பதானின் பதிவு!
ஊரடங்கு சமயத்தில் சமீபத்தில் லைவ் சாட்டில் பேசிய யூசுப் பதான் IPL தொடரில் சிறந்த கேப்டன் யார் என்பதை குறித்து பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் விளையாடிய சகோதரர்களில் யூசுப் மற்றும் இர்பான் பதான் சகோதரர்களும் ஆவர். ஆல்ரவுண்டரான யூசுப் பதான் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அதிரடியை காட்டி அசத்த கூடியவர்.
2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய யூசுப் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மேலும் 2008 ஆம் ஆண்டு IPL சாம்பியன் பட்டத்தை வென்றபோதும் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்று இருந்தார்.
அந்த ஆண்டு ராஜஸ்தான் அணியில் குறிப்பிட்டு சொல்லும்படியாக பிரபல வீரர்கள் யாரும் இல்லை. அனுபவம் வாய்ந்த ஒரே வீரரான ஷேன் வார்னே தான் கேப்டனாக செயல்பட்டார். ஆனாலும் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பிரபலமான வீரர்களே இல்லாத அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்த வார்னே தான் IPL வரலாற்றில் என்னை பொறுத்தவரையில் சிறந்த கேப்டன் என யூசுப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள யூசுப் பதான் அந்த ஆண்டு ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல கேப்டனாக இருந்த ஷேன் வார்னே தான் கரணம். மூன்று ஆண்டுகள் ஷேன் வார்னேவின் தலைமையில் ஆடினேன். அவர் போட்டிக்கு முன்பே பேட்ஸ்மேன்களுக்கு எப்படி பந்துவீசி வீழ்த்த வேண்டும் என வழி காட்டுவார். அவர் கூறியது போலவே நாங்களும் செய்து பேட்ஸ்மேனை வீழ்த்துவோம் என்றார்.