96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உஷார்.! வரும் 2024 புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்.!
வரும் 2024 புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டிய நான்கு ராசிகள் குறித்து பார்க்கலாம்.
ரிஷப ராசி :
இந்த 2024 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வேலையை பொறுத்து பதவி உயர்வு கிடைக்கலாம். நீங்கள் செய்யும் அனைத்து செயலையும் நன்றாக திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம். பதவி மாற்றமோ அல்லது இடமாற்றமும் இருந்தால் தயக்கம் இல்லாமல் ஏற்றுக் கொள்வது நல்லது. மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து பெருமாளை வழிபடுவது நல்லது.
சிம்ம ராசி :
இவர்களுக்கு இரண்டாவது வீட்டில் கேது நான்காவது வீட்டில் சுக்கிரன் மற்றும் ஒன்பதாம் வீட்டில் வியாழன் சஞ்சரிக்கின்றனர். உங்களுக்கு ஏற்படும் தடைகளை முழு முயற்சியுடன் சமாளிப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமை மதிக்கப்படும். சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. எந்த விஷயமாக இருந்தாலும் அதில் சிரத்தையுடன் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.
கும்ப ராசி :
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடத்தின் துவக்கத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆனால் மிகவும் நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். உங்களது மேலதிகாரிகளினால் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும் தாமதம் ஆனாலும் கூட நிச்சயம் உங்கள் உழைப்புக்கான பலன் உங்களை வந்து சேரும்.
விருச்சிக ராசி :
இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். ஆனால் பொறுப்புடன் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கர்பத்துடன் நடந்து கொண்டால் திடீர் சறுக்கல்களை சந்திக்கலாம். தன்னம்பிக்கையுடன் கவனமாக செயல்பட்டால் நீங்கள் விரும்பிய முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுவது உங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்.