திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டது.! இந்த விஷயங்களை மறந்தும் கூட செய்யாதீங்க.!?
பொதுவாக கோடை காலம் என்றாலே பலருக்கும் சங்கடத்தை அளிக்கும் காலமாகவே இருந்து வருகிறது. அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதில் குறிப்பாக அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பித்து விட்டதால் உச்சகட்டமான வெப்பம் மக்களை தாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இது போன்ற நிலையில் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் என்னென்ன விஷயங்களை செய்யலாம்? என்னென்ன விஷயங்களை செய்யக்கூடாது? என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
குறிப்பாக அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது. அதாவது சித்திரை 21 ஆம் நாளன்று தொடங்கி வைகாசி 15 ஆம் நாளன்று முடிவடைகிறது. சூரிய பகவானின் தாக்கம் அதிகமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் சில சுப காரியங்களை செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தின் படி நம் முன்னோர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
செய்யக்கூடாத சுப காரியங்கள் என்னென்ன?
கட்டுமான பணியை துவங்குவது, கிணறு வெட்டும் பணியை துவங்குவது, பூமி பூஜை செய்வது, மரம் வெட்டுவது, குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்துவது, விவசாய வேலைகள் துவங்குவது, பந்தக்கால் நடுவது போன்ற வேலைகளை செய்யக்கூடாது.
அக்னி நட்சத்திர காலகட்டத்தில் செய்யக்கூடிய சுப காரியங்கள் என்னென்ன?
திருமணம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம், கட்டிய வீட்டிற்கு குடி போவது, வாடகை வீடு மாறுவது, சுப காரியங்களை துவங்குவது போன்றவைகளை செய்யலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் குடும்ப தலைவனாக இருக்கும் சூரிய பகவான் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் உக்கிரமாக இருப்பதால் இந்த நேரத்தில் செய்யக்கூடிய சுப காரியங்களில் சூரிய பகவானின் அருள் கிடைக்காது என்பதால் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.