காகம் இப்படியெல்லாம் சத்தமிட்டால் என்னென்ன பலன்கள்.!



Benefits of crows sounds

சகுன சாஸ்திரங்களில் முக்கிய பறவையாக இருப்பது காகம். சனி பகவானின் மகனமான காகம் சத்தமிடுவதற்கு பல்வேறு சகுனங்களை உள்ளடக்கியுள்ளது. பொதுவாக காலையில் ஒரு வீட்டின் மரத்தில் அமர்ந்து காகம் சத்தமிட்டால் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள் என்பதை குறிக்கும்.

அதேபோல் காகம் எங்கெங்கெல்லாம் அமர்ந்து சத்தமிட்டால் என்னென்ன பலன்களைக் குறிக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். காகம் ஆற்றங்கரை ஓரம் உள்ள மரங்களில் அமர்ந்து சத்தமிட்டால் மழை பொழிவதற்கான அறிகுறியாகும். 

Crows sounds

அதேபோல், பூ மற்றும் காய்கனிகளை காகம் கொத்திக் கொண்டு வீட்டின் கூரை மேல் போட்டால் அந்த வீட்டில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கும். புல் மற்றும் குச்சிகளை கொண்டு வந்து குறைமேல் போட்டால் பெண் வாரிசு உண்டாகும் என்பதை குறிக்கும்.

வீட்டு தோட்டத்தில் உள்ள பசுமையான மரங்களில் காகம் கூடு கட்டுவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. அவ்வாறு கூடு கட்டுவது அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு செல்வ செழிப்பை கொடுக்கிறது.

Crows sounds

ஆனால், காய்ந்து போன,  பட்டுப்போன மரத்தில் காகம் கூடு கட்டினால் அது அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு துன்பம் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.

குறிப்பாக காகங்கள் கூட்டமாக சேர்ந்து சத்தமிட்டு கொண்டே சென்றாள் அப்பகுதியில் நடக்கவிருக்கும் அசம்பாவிதங்களின் முன்னறிவிப்பாக கருதப்படுகிறது. மேலும், ஒரு வீட்டிலிருந்து காகம் பாத்திர பண்டங்களை தூக்கி செல்வது அபசகுனமாக கருதப்படுகிறது.