நாளை சித்திரை வியாழன், குடும்பத்தில் நிம்மதி இல்லாதவர்கள் இதை செய்யுங்கள்.! 



Chithirai viyazhan prahma vazhipadu 

நாம் பிறக்கும் போது நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற தலை எழுத்தை முடிவு செய்வது பிரம்ம தேவன் தான். எனெனில், நம்மை படைக்கும் போதே நம் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நம் தலையில் எழுதுவது பிரம்மதேவன். ஒருவருடைய வாழ்க்கை சண்டை சச்சரவாகவும், நிம்மதி இல்லாமலும் செல்லும் போது அவர்களது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு திருச்சி அருகேயுள்ள திருப்பட்டூர் பிரம்ம தேவனின் ஆலயத்தில் சென்று அந்த ஜாதகக்காரரின் பெயருக்கு அர்ச்சனை செய்தால் அவருடைய தலையெழுத்து சரியாகும் என்று நம்பப்படுகிறது. 

Prammadevan

உங்கள் தலையெழுத்து எப்படி இருந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் வியாழக்கிழமையில் மனதார பிரம்ம தேவனை வழிபட்டால் உங்கள் தலையெழுத்து மாற்றி அமைக்கப்படும். பிரம்ம தேவனை எவ்வாறு வழிபடலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று பிரம்ம தேவனை மனதார நினைத்து வெள்ளை நிற தாமரையால் அவரது படத்திற்கு அலங்காரம் செய்ய வேண்டும். 

Prammadevan

அதன்பின் நெய்யால் தீபத்தை ஏற்றி ஏதேனும் ஒரு நைவேத்தியத்தை வைத்து 1008 முறை, 108 முறை அல்லது 11 முறை கூட இந்த "ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹரண்ய கர்ப்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்" எனும் காயத்ரி மந்திரத்தை சொல்லி பூஜை செய்யலாம். இதன் மூலம் நமது கர்ம வினைகளை எல்லாம் பிரம்மதேவன் போக்கி அருள் புரிவார். இதன் மூலம் நமது வாழ்வு வளமாகும்.