மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சனிக்கிழமையில் இந்த பொருட்களை எல்லாம் வாங்கினால் கெட்டது நடக்கும்.. இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.!
சனிக்கிழமையில் இந்த பொருட்களை எல்லாம் வாங்கினால் துரதிஷ்டம் ஏற்படும் என்று சாஸ்திரம் கூறுகிறது. சாஸ்திரத்தை நம்புபவர்கள் கீழ்காணும் பொருட்களை எல்லாம் சனிக்கிழமையில் வாங்காதீர்கள்.
சனி பகவானுக்கு உகந்த தினமாக இருப்பது சனிக்கிழமை. இந்த நாட்களில் இரும்பு உள்ளிட்ட பொருட்களை வாங்குவது கூடாது. சனி அதிகம் ஆதிக்கம் செலுத்தும் பொருள் இரும்பு. எனவே, இரும்பு சம்பந்தப்பட்ட பொருளை அன்றைய தினம் வாங்கினால் வீட்டில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் உருவாகும்.
ஆனால் மாறாக அன்றைய தினத்தில் இரும்பு பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக வழங்கினால் கடன் பிரச்சினைகளும், குடும்ப பிரச்சினைகளும் தீரும் என்று நம்பப்படுகிறது.
அது போல சனிக்கிழமையில் உப்பு வாங்க கூடாது. உப்பை வெள்ளிக்கிழமையில் வாங்குவதுதான் சிறப்பானது. சனிக்கிழமையில் உப்பு வாங்கும் பட்சத்தில் தொழிலில் தேவையற்ற நஷ்டங்கள் ஏற்படும். வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்கி பூஜை அறையில் வைப்பது நல்லது. உப்பில் மகாலட்சுமி இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே தான் வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
வீட்டை சுத்தம் செய்யக்கூடிய துடைப்பம் போன்ற பொருட்களை சனிக்கிழமையில் வாங்க கூடாது. அதுபோல சனி பகவானுக்கு ஏற்ற எள்ளையும் சனிக்கிழமையில் வாங்க கூடாது.
இந்த சனிக்கிழமையில் எள் எண்ணெயை பயன்படுத்தி சனி பகவானுக்கு தீபம் ஏற்றினால் பணவரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அதுபோல கூர்மையான பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை சனிக்கிழமை வாங்க கூடாது. அப்படி வாங்கினால் பிறருடன் பகை ஏற்படலாம்.