திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கோயில் குளத்தில் மிதந்து வரும் திருநீர்.. இந்த அதிசய கோயில் எங்குள்ளது தெரியுமா.!?
பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில், மடவிளாகம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான கோயிலான இந்த ஆவுடையார் கோயில் 1000 முதல் 1500 ஆண்டுகள் வரை தொன்மையானதாக அங்குள்ள கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டுள்ளது. பச்சை நிற ஓடு போன்ற அமைப்புடன் சிவன் காணப்படுவதால் இவரை பச்சோட்டு ஆவுடையார் என்று அழைக்கப்பட்டு வருகின்றார்.
இக்கோயிலின் பின்பக்கத்தில் தன் நகத்தால் கீறியே குளம் ஒன்றை சிவன் அமைத்துள்ளார். காவிரியைப் போன்ற பெருமை வாய்ந்ததாக இக்குளம் கருதப்பட்டு வருகிறது. நிகபுஷ்பகரனி என்று அழைக்கப்பட்டு வரும் இக்குளத்தில் ஒருமுறை விபூதி நிறைந்த சொம்பு பாத்திரம் போன்று மிதந்து வந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பாக குடத்தில் மிதந்து வந்த விபூதி தற்போது சுருங்கி சொம்பு பாத்திரத்தில் மிதந்து வருகிறதாம்.
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் அருமருந்தாக இந்த விபூதி வரும் அந்தப் பகுதியில் உள்ள ஊர் மக்களும், பக்தர்களும் கருதி வருகின்றனர். இந்த அருமருந்தான விபூதியை நோய் பாதிப்பு உள்ள இடத்தில் பூசி வந்தாலோ அல்லது சிறிது சாப்பிட்டாலோ உடலில் ஏற்படும் நோய் பாதிப்புகள் உடனடியாக குணமடைகிறது என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும் இக்குளத்தில் உள்ள நீரை தலையில் தெளித்துக் கொண்டால் தீராத பாவங்களும் தீரும் என்று நம்பப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை தரும் பச்சோட்டு ஆவுடையார் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் தினம்தோறும் குவிந்து வருகிறது.