எவ்ளோ கஷ்டப்பட்டாலும் கையில் காசு தங்கவில்லையா.?! இதை செய்யுங்கள்.!



Lakshmi gubera Deepa valipadu for money issues and problems 

செல்வ செழிப்பை அதிகரிக்க கூடிய லட்சுமி குபேர தீப வழிபாடு

பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்கள், கடன் தொல்லைகள் உள்ளிட்டவை நீங்கி செல்வமும், பணப்புழக்கமும் அதிகரிக்க லட்சுமி குபேர தீப வழிபாடு மிகச் சிறந்த பரிகாரமாகும். 

இந்த தீபத்தை ஏற்றுவதால் கல்வி, வியாபாரம், குழந்தை பாக்கியம் .செல்வ செழிப்பு, மனை வீடு வாங்கக்கூடிய அதிர்ஷ்டம் உள்ளிடவை கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கடன் பிரச்சினைகள் தீரும்.

இதையும் படிங்க: அசைவ உணவை பிரசாதமாக வழங்கும் சிவன் கோயில்.. எங்கு உள்ளது தெரியுமா.!?

Lakshmi gubera Deepam

செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

இந்த தீபத்தை எப்படி ஏற்றுவது.? 

குபேர பூஜை நாட்களில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இது தவிர விரத நாட்கள், அமாவாசை, பௌர்ணமி, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதனை ஏற்றலாம். 

விளக்கை ஏற்றுவதற்கு முன்பாக பசும்பால் மற்றும் சுத்தமான நீரில் குபேர தீபத்தை கழுவ வேண்டும். அதில் நெய் அல்லது தீப எண்ணெய் ஊற்றி வீட்டு பூஜையறையில் ஏற்றி வைக்கலாம்.