திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
150 ஆண்டுகளுக்கு மேலாக கோயிலை பாதுகாக்கும் அதிசய முதலை.! இக்கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?
ஆனந்த பத்மநாபசுவாமி கோயில்
பொதுவாக இந்தியாவில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒவ்வொரு விதமான தனிச்சிறப்பும், வரலாற்று கதைகளும் இருந்து வரும். இந்த தனித்துவமான வரலாற்று கதைகளே அந்த கோயில் மக்கள் மத்தியில் பிரசித்து பெற்று விளங்க காரணமாக அமைந்து வருகிறது. அந்த வகையில் கேரள மாவட்டத்தில் அனந்தபுரம் என்ற பகுதியில் அனந் பத்மநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் கேரளாவில் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அனந்த பத்மநாபசுவாமி கோயிலை சுற்றி தலைவாசல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோயிலில் குளம் ஒன்று அமைந்துள்ளது. பச்சை பசேலென்று இருக்கும் இக்குளத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக முதலை ஒன்று கோயிலை பாதுகாத்து வருவதாக கூறபட்டு வருகிறது.
இதையும் படிங்க: "குலம் காக்கும் குலதெய்வம்" குலதெய்வ வழிபாட்டு முறைகளை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம்.!?
அதிசய முதலை
பபியா என்று அழைக்கப்படும் இந்த முதலை கோயிலை பாதுகாப்பதோடு, கோயிலுக்கு வரும் மக்களால் மரியாதைக்குரிய முதலையாகவும் வளர்க்கப்பட்டு வருகிறது. 150 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு முதலை இருந்ததாகவும் அந்த முதலை இறந்த பிறகு இந்த பபியா முதலை எங்கிருந்தோ இக்கோயிலின் குளத்திற்கு வந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இக்கோயிலை சுற்றி குளத்தை தவிர வேறு எந்த நீர் நிலையும் இல்லை என்பதால் இந்த முதலை எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.
சைவ உண்ணியாக மாறிய முதலை
குறிப்பாக இந்த முதலையின் விசேஷமான குணமாக கருதப்படுவது, இந்த பபியா முதலை கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் உணவுகளை மட்டுமே உண்டு உயிர் வாழ்கிறது. கோயில் குளத்தில் உள்ள மீன்களைக் கூட பிடித்து உண்ணுவதில்லை என்று கூறி வருகின்றனர். பொதுவாக முதலை இனம் என்றாலே அசைவ உண்ணியாகவே இருந்து வரும் நிலையில், இந்த பபியா முதலை சைவ உணவுகளை மட்டும் உண்டு உயிர் வாழ்வது இக்கோயிலின் அதிசயமாக கருதப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ராகு, கேது தோஷம் நீங்கி திருமணம் நடைபெற இந்த கோயிலுக்கு சென்று பாருங்கள்.!?