#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்த 3 ராசிக்கு.. 2025-ல் சொர்க்க வாழ்க்கை ஆரம்பம்.. இனி எல்லாமே வெற்றிதான்.!
வரும் மே 2025 ஆம் ஆண்டு முதல் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்ல உள்ளார். இது புதனின் சொந்த ராசி. குருவின் இந்த பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அவை நேர்மறையாகவும் இருக்கலாம். எதிர்மறையாகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் ஒரு சில ராசிகள் சொர்க்க வாழ்வை பெறப்போகிறார்கள். அவை குறித்து பார்க்கலாம்.
துலாம்
:
குரு பகவானின் இந்த பயணம் துலாமுக்கு மிகவும் சாதகமாக அமையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிப்பதுடன் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டு படிப்பிற்காக முயற்சி செய்பவர்களுக்கு இப்பொழுது நல்ல வாய்ப்பு. உடல் ஆரோக்கியம் மேம்படும். அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். சில இடத்தில் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். திருமண வாழ்க்கையிலும் இதுவரை இருந்த மனக்கசப்புகள் நீங்கி சந்தோஷம் ஏற்படும்.
இதையும் படிங்க: இந்த ராசிகளுக்கு ஈஸியா இரண்டாவது திருமணம் நடக்குமாம்.! உங்கள் துணையின் ராசி இதுவா.?!
மேஷம்
:
2025 உங்களுக்கு மிக சிறப்பான வருடம். உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் குருபகவான் அமருகிறார். இதனால் உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். இந்த காலகட்டம் தன்னம்பிக்கை மற்றும் மன தைரியத்தை அதிகரிக்க கூடிய காலகட்டமாக இருக்கும். நிதி நிலைமை முன்னேறும். பணவரவில் தங்கு தடைகள் இருக்காது. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உங்களது நீண்டகால ஆசைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
மீனம்
இந்த ராசியில் பல்வேறு மாற்றங்கள் நிகழப் போகின்றன. இவை அனைத்தும் உங்களுக்கு நன்மையை தரும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனங்களுக்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில் குறித்த முயற்சிகள் பெரும் வெற்றியைத் தரும். வேலை வாய்ப்புகள், பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். தனிப்பட்ட முறையில் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிறு சிறு சிக்கல்கள் கூட இனி நீங்கிவிடும்.
இதையும் படிங்க: இந்த ராசிகளுக்கு ஈஸியா இரண்டாவது திருமணம் நடக்குமாம்.! உங்கள் துணையின் ராசி இதுவா.?!