ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இந்த கோயிலில் மாலை 6 மணிக்கு மேல் நடக்கும் மர்மம்.? பயத்தில் இருக்கும் ஊர் மக்கள்.!?
பாலைவனப் பிரதேசமான ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இந்த கிரடு கோயில் அமைந்துள்ளது. என்னதான் ராஜஸ்தானில் உள்ள இடங்கள் பாலைவனமாக காணப்பட்டாலும் இக்கோயிலில் உள்ள பகுதிகளை சுற்றிலும் சொர்க்க பூமியாகவே இருந்து வருகிறது. அந்த அளவிற்கு நிலைத்தளத்துடன் இரு பக்கமும் பூத்துக் குலுங்கும் மலர்களுடன் அழகாக பார்ப்பவரை கவரும் வண்ணம் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அழகாக காட்சி அளிக்கும் இந்த கிரடு கோயிலில் மாலை 6:00 மணிக்கு மேல் பல மர்மங்கள் நடைபெறும் என்று அங்கு வரும் பக்தர்கள் கூறி வருகின்றனர். மேலும் காலை முதல் மாலை 6:00 மணி வரை அங்கு பூஜைகள் நடைபெறும். ஆறு மணிக்கு மேல் இக்கோயில் பக்கம் யாரும் தவறியும் கூட செல்வதில்லை என்று கூறி வருகின்றனர்.
அதையும் மீறி கோயிலுக்கு ஆறு மணிக்கு மேல் செல்லும் பக்தர்களை அங்குள்ள சிலைகள் தண்டித்து விடுகின்றன. மேலும் இக்கோயில் மனிதர்களை சிலையாக்கி விடுகிறது என்று அப்பகுதியில் வாழும் மக்கள் கூறியுள்ளனர். இதற்கு காரணமாக கூறப்படுவது நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு மகரிஷி முனிவர் இக்கோயிலின் அருகில் தியானம் செய்து கொண்டிருநாதர்.
அவரை அவ்வூர் மக்கள் தொல்லை செய்ததன் காரணமாக அவரளித்த சாபத்தினாலேயே இக்கோயிலுக்கு ஆறு மணிக்கு மேல் வரும் பக்தர்கள் கல்லாகி விடுகின்றனர் என்று அங்குள்ள மக்கள் நம்பி வருகின்றனர். மேலும் அக்கோயிலின் சுற்றி இருக்கும் பகுதிகளில் மனிதர்களைப் போன்ற உருவம் கொண்ட சிலைகள் பலவற்றைக் காணலாம். பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோயில் பயத்திற்கும், அமானுஷ்யத்திற்கும் பெயர் பெற்ற கோயிலாக இருந்து வருகிறது.