கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஞாயிற்றுக்கிழமையில் சூரிய வழிபாடு.. இவ்வளவு மேன்மைகளா.?! அதிலும் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டும்.!
சூரியன் ராஜ கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சூரியனை அன்றாடம் நமஸ்காரம் செய்து வழிபட்டால் நமது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும். இருப்பினும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சூரிய பகவான் வழிபாடு மேற்கொள்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை சூரிய பகவானை வழிபடுவதால் நமது ஆரோக்கியம் மேம்படுவதுடன் அரசாளும் யோகம் கிடைக்கும்.
இந்த சூரிய வழிபாடு காலம் காலமாக நடைபெற்று வரும் ஒன்று. தை பொங்கல் கொண்டாடும் நாளில் பயிர்களையும் உயிர்களையும் காக்கும் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறோம்.
மற்ற நாட்களில் சூரியனை நாம் மறந்து விடுகிறோம். பொதுவாக ஆவணி ஞாயிறு கிழமைகளில் தவறாமல் சர்க்கரை பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது கண் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காக்கும்.
நவகிரகங்களில் ராஜ கிரகமாக இருக்கின்ற சூரியனுக்கு சிம்மம் தான் சொந்த வீடு. சிம்ம ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது ஒருவர் பிறந்தால் அவருக்கு ஜெகத்தை ஆளுகின்ற யோகம் கிடைக்கும்.
செல்வ வளர்ச்சி ஆனது மற்றவர்கள் வியக்கும் அளவிற்கு ஏற்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கவசம் பாடி சூரியனை வழிபடும் பட்சத்தில் நமது துன்பங்கள் அனைத்தும் தள்ளி போகும். நமது வேலைகளை சுறுசுறுப்புடன் செய்ய நமக்கு உத்வேகம் கொடுப்பதுடன் அரசியல் ரீதியான ஆதரவுகள் ஏற்படும்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கீழ்காணும் ஸ்லோகத்தை உச்சரித்து சூரிய பகவானை தரிசிப்பது நமது வாழ்க்கையில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும்.
"காசினி
இருளை நீக்கிக்
கதிரொளியாகி யெங்கும்
பூசனை
உலகோர் போற்றப்
புசிப்பொடு சுகத்தை
நல்க
வாசி ஏழுடைய
தேரின்மேல் மகா
கிரிவலமாகி வந்த
தேசிகா.!
எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே.!
போற்றி..! போற்றி..!"