#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாளை தைப்பூசம்.. திருமணத் தடை நீங்க.. முருகனை இப்படி வழிபடுங்கள்.!
தமிழ் கடவுளான முருகனுக்கு கொண்டாடப்படும் விசேஷங்களில் முக்கியமான விழாவாக இருப்பது தைப்பூசம். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் தான் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி நாளை தைப்பூசத் திருவிழா உலகெங்கும் இருக்கும் தமிழக பக்தர்களால் கொண்டாடப்பட இருக்கிறது. தைப்பூசத்தில் தான் முருகன் தனது காதலியான வள்ளியை கரம் பிடித்தார்.
இது திருமணத்திற்கு மிக உகந்த நாளாக கருதப்படுகிறது. எனவே இந்த நாளில் திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் அல்லது வழிபாடுகளை மேற்கொள்ளும் போது அது சிறந்த முடிவுகளை தரும் என்று நம்பப்படுகிறது.
மேட்ரிமோனி உள்ளிட்டவையில் பதிவு செய்வது, வரன் பார்க்க செல்வது, உள்ளிட்ட விஷயங்களை தைப்பூச நாளில் மேற்கொள்ளும் போது திருமணம் கைகூட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் எந்த தடைகளும் இல்லாமல் திருமணம் விரைவில் நல்ல முறையில் நடந்து முடியும்.
திருமணம் ஆகாத நபர்கள் தைப்பூசநாளில் அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, வீட்டில் இருக்கும் முருகன் படம் அல்லது வேல் இருந்தால் அதை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து, விளக்கேற்றி பூஜிக்க வேண்டும்.
அன்றைய தினம் விரதம் இருந்து முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்ல பலன் தரும். முடிந்தால் இதை தைப்பூச நாளிலிருந்து 13 நாட்கள் வரை மேற்கொள்ளலாம். முடியாத நபர்கள் தைப்பூச நாளில் மட்டும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.
திருமண தடை இருக்கும் நபர்கள் மட்டுமல்லாமல் தம்பதியினர் இந்த வழிபாடை மேற்கொள்ளும் போது அவர்களுக்குள் ஒற்றுமை நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை இல்லா தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும்.