உங்களுக்கு இப்படி கனவு வந்தால், உஷாராக இருக்கணும்.. கனவு பலன்கள்.!



what is the meaning of death dream who we loved

இறப்பதை போல கனவு

நாம் காண்கின்ற ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. யாராவது இறப்பது போல கனவு காணும் பட்சத்தில் நமது துன்பங்கள் விலகி விட்டதாக அர்த்தம். உயிருடன் இருப்பவர் யாராவது கனவில் இறந்துவிட்டால் அவர்களது ஆயுள் கூடும் என்பதை இந்த கனவு குறிக்கிறது.

முன்னோர்களின் ஆசி

உயிரிழந்த தாய், தந்தை அல்லது தாத்தா, பாட்டியிடம் சிரித்து பேசுவது போல கனவு வந்தால் நமக்கு புகழ் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். துன்பங்களை போக்க முன்னோர்களின் ஆசி கிடைத்துள்ளதாக அதற்கு அர்த்தமாகும். இறந்து போனவர்கள் நம் வீட்டில் வந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் நமக்கு செல்வ செழிப்பு, திடீர் பணவரவு உருவாக போகிறது என்று அர்த்தம்.

Dream

எச்சரிக்கை

இறந்தவர்கள் கனவில் வந்து அடிக்கடி பேசினால் உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறார்கள் என்று அர்த்தமாம். இறந்து போன தாய், தந்தையை தம்பதி சகிதமாக கனவில் பார்த்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தமாம். தாய் மட்டும் கனவில் வந்தால் குடும்பத்தில் நெருங்கிய உறவில் இருப்பவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம்.

கண்டத்திலிருந்து விடுதலை

அதுபோல தந்தை மட்டும் நம் கனவில் வந்தால் நீண்ட நாள் இருந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்று அர்த்தமாம். இறந்து போனவர்கள் நம் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பதைப் போல கனவு கண்டால் மிகப்பெரிய கண்டம் நம்மிடம் இருந்து நிறுவி விட்டது என்று அர்த்தமாம். உங்களுடன் அமர்ந்து இறந்து போனவர்கள் சாப்பிடுவது போல கனவு கண்டால் நமக்கு புகழ் வந்து சேருமாம்.