திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
டிரைவரின் கவனக்குறைவால் பஸ் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலி... சேலத்தில் பரபரப்பு!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசல் தாலுகா லத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் காசி - சுதா தம்பதியினர். இவர்களுக்கு வேதாசினி(4) ,பவனிகாஸ்ரீ(11/2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வேதாசினி வீரகனூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள்.
இன்று வழக்கம் போல் சுதா தனது இளைய மகளை வீட்டில் விட்டு விட்டு வேதாசினியை பள்ளி பேருந்தில் ஏற்றி விடுவதற்காக நெடுஞ்சாலைக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பவனிகாஸ்ரீ வந்ததை சுதா கவனிக்கவில்லை.
பள்ளி பேருந்தில் வேதாசினி ஏறியதும் கீழே இருந்த குழந்தையை கவனிக்காமல் பஸ்ஸை எடுத்துள்ளார் டிரைவர். அதில் பவனிகாஸ்ரீ உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி பஸ் டிரைவர் மற்றும் கிளினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.