மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு ரிசல்ட் எப்போ வெளியாகும்?? வெளிவந்த தகவல்!!
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்
10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுகள் நடந்து முடிந்துள்ளது. இதில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதியுள்ளனா்.
இதேபோல் 10 ஆம் பொதுத்தோ்வு மாா்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தோ்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது.
இந்த நிலையில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும், 10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரியின் மூலம் மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளலாம். மேலும் SMS மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.