திருவிழாவில் நடந்த அந்த சம்பவத்தால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!



10-peoples-admitted-hospital-dindugal-festival

திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் அன்னதான மோர் குடித்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் கிராமத்தில் நேற்று முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Festival

அப்போது திருவிழாவில் பொதுமக்களுக்கு அன்னதானமாக நீர்மோர் போன்ற நீர் ஆகாரங்கள், வெள்ளரிக்காய் மற்றும் மாங்கா போன்ற தின்பண்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை குறித்த பொதுமக்கள் பலருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள தாடிக்கொம்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து 10 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Festival

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட சுகாதாரத் துறையினர் பொதுமக்கள் அருந்திய நீராகாரம் மற்றும் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். இனிவரும் நாட்களில் தொடர்ந்து திருவிழா நடைபெறும் என்பதால் பொதுமக்கள் அனைத்தையும் வாங்கி உண்ணாமல் தங்களது உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.