மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குட் நியூஸ்... நூறு நாள் வேலை திட்ட ஊதியம் ₹300 ஆக உயர்த்தப்படும்... ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் புதிய குடிநீர் திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
தற்போது கூட தமிழகம் முழுவதும் 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 உதவி தொகை வழங்கி வருகிறார். அதில் விடுப்பட்டவர்களுக்கு மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஊரக வளர்ச்சி துறையில் நூறு நாள் வேலை திட்டத்தின் ஊதியம் 210 ரூபாயில் இருந்து 290 ஆக வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ₹300 ஆக உயர்த்தி வழங்கப்படும் என பேசியுள்ளார்.