திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
1000 வழங்கப்படும் என்பது முற்றிலும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க..! தமிழக அரசு அதிரடி..!!
அரசு தனது மக்களுக்காக திட்டங்களை விரிவுபடுத்தி, அதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, போலியான அரசு அறிவிப்புகளை வைத்து பல மோசடி செயல்களும் நடக்கின்றன.
இதனை தடுக்க பல்வேறு முயற்சிகள் காவல்துறையினர் மற்றும் சைபர் கிரைம் நிபுணர்களால் எடுக்கப்பட்டு வந்தாலும், அவை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தமிழக ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் ஓட்டுநர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வங்கி கணக்கில் வரவைக்கப்படும் என்ற வதந்தியானது அதிகளவில் பரவி வந்தது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என்பது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது.
அந்த செய்தியை நம்பி யாரும் ஏமாற வேண்டாம், அது தொடர்பாக முன்பதிவு செய்ய என கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களது தனிப்பட்ட தகவலை பகிர வேண்டாம். இது மோசடியாளர்களின் நூதனமுறை என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.