மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவர்களே ரெடியாகுங்க.. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் எப்பொழுது?? வெளியானது கால அட்டவணை!!
ஒவ்வொரு கல்வியாண்டும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறும். அந்த வகையில் 2023-24ஆம் கல்வியாண்டில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எப்பொழுது என ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று பொது தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
அதன்படி 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது. செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகிறது.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2024ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24-ம் தேதி முடிவடைகிறது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24-ம் தேதி முடிவடைகிறது. மேலும் மே 14-ம் தேதி பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2024ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைகிறது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29-ம் தேதி முடிவடைகிறது. மேலும் 10ஆம் வகுப்பிற்கான பொதுதேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.