திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!
2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெற உள்ளது. மேலும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடைபெறு இருக்கிறது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.