மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோயில் கடற்கரையில் அசிங்கம் செய்த ஜோடி.. தட்டி கேட்ட போலீசரை தாக்கிய 11 பேர் கைது.!
திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் தினகரன் கனகராஜ். இவருடன் மணிமுத்தாறு சிறப்பு காவல் படை பட்டாலியன் வேலுமணியும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கோயில் வளாகத்தில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கோயில் புற காவல் நிலையம் பின்பகுதியில் ஒரு ஜோடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து அந்த வழியாக சென்ற போலீசார் அங்கிருந்தவர்களை விசாரித்துள்ளனர். அதில் கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பதும், ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்ததும் தெரிய வந்தது.
மேலும், அந்த பகுதியில் சுற்றி திரிந்த சிலரையும் கண்டித்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அனைவரும் சேர்ந்து போலீஸ்காரர் வேலுமணியை சரமாரியாக தாக்கி, சீருடையை கிழித்துள்ளனர். இதனையடுத்து வேலுமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகுமார் உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.