மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாவட்டம் எது?.. விபரம் உள்ளே..!!
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதியான இன்று மதியம் 2 மணியளவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி சரியாக இன்று மதியம் 2 மணியளவில் தேர்வு முடிவுகளானது வெளியிடப்பட்டது. அதில், மாணவியர் 94.36% தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், மாணவர்கள் 86.99%தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மாணவியர்கள் மாணவர்களை விட 7.37 விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர்.
மேலும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 96.38% உடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 82.58 விகிதம் தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.